banner Book an Appointment

கோவில்பட்டியின் உலகத்தரம் வாய்ந்த எலும்பு மருத்துவமனை

January 28, 2019

கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். கோவில்பட்டி மதுரையில் இருந்து 100 கி.மீ தெற்கிலும் திருநெல்வேலியில் இருந்து 55 கே.மீ வடமேற்கிலும் அமைந்துள்ளது.


கோவில்பட்டி தொழில்துறை சார்ந்த நகரம் ஆகும். தீப்பட்டி தொழிற்சாலை மிகவும் அதிகமாக காணப்படும் நகரம் ஆகும். மிகவும் பிரபலமான ரோஸ் தீப்பட்டி தொழிற்சாலை, சைக்கிள் பிராண்டு மற்றும் ஈகில் பாக்ஸ் போன்ற தொழிற்சாலைகள் அமையப்பெற்றுள்ள நகரம் ஆகும். மேலும் ஜவுளி ஆலைகள், வானவேடிக்கை தொழிற்சாலைகளும் கோவில்பட்டி மக்களின் அன்றாட தொழில் ஆகும்.


கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவள்ளி பூவன நாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா கோவிலாக அமைந்துள்ளது. மேலும் கோவில்பட்டியின் மேற்கில் கதிரேசன் மலையில் கதிரேசன் கோவில் அமைந்துள்ளது, இம்மலையில் ஏறினால் கோவில்பட்டியின் முழு அழகையும் காண முடியும். கோவில்பட்டியின் கிழக்கில் எட்டயபுரம், தேசியவாத கவிஞர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி மகாகவி சுப்பிரமணி பாரதியார் பிறந்து வளர்ந்த மண் இங்கு பாரதியார் மணிமண்டபமும், ஜமீன் மாளிகையும் சுற்றுலா ஸ்தலமாகும். மேலும் ஓட்டப்பிடாரம் வடக்கில் 3 கி.மீ தொலைவில் பாஞ்சாலங்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, மற்றும் கழுகு மலை சுற்றுலா ஸ்தலமாக அமைந்துள்ளது.


மேலும் கடலை மிட்டாய் கோவில் பட்டியின் அடையாள திபாண்டமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கோவில்பட்டி நகரின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை. எங்கள் மருத்துவமனையில் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரைச்சனைகளுக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவார்களைக் கொண்டு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப் பிரிவில் செய்யப்படுகிறது.

எங்கள் சிகிச்சைகள்:

  • எலும்பு மாற்று சிகிச்சை
  • முதுகெலும்பு அறுவை சிகிச்சை(Spinal surgeries)
  • காயம் மற்றும் புனரமைப்பு (Trauma and reconstructive orthopedic)
  • பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை(Plastic and reconstructive surgeries)
  • வலி நிவாரண (pain relief)
  • கை அறுவை சிகிச்சை

எலும்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினைகளாயினும் கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த எலும்பு அறுவை சிகிச்சை தரும் கோவில்பட்டியின் ஒரே எலும்பியல் மருத்துவமனை கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனை..!!(Kovilpatti Venkateswara Hospital)
உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்….!!

Mail Us : kvpvenkateswarahospital@gmail.com
Book Your Appointment Here : kovilpattivenkateswarahospitals.com/book-an-appointment

Enquiry Now

Testimonials

Image Gallery

NEWSLETTER & SUBSCRIPTION